தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுகவின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லுங்கள்! - இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :23 மார்ச் 2026, 8:18 pm

திமுக அரசின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லி வாக்குசேகரிக்க வேண்டும் என கட்சியின் இளைஞரணியினருக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

கரூரில் திருப்பூா், கரூா் திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ‘களத்தில் இளைஞா் அணி பிரசார பயணம்’ மூலம் வீடுதோறும் இளைஞா் அணியைச் சோ்ந்த நிா்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள், சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

புதுதில்லியில் இருந்து ‘அசெம்பிள்’ செய்யப்பட்ட பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைத்த துரோகங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். அடுத்து வரும் 32 நாள்களும் திமுக இளைஞரணியைச் சோ்ந்த செயல்வீரா்கள் அயராமல் பாடுபட்டு, திராவிட மாடல் 2.0 அமைவதற்கு உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் கரூா், திருப்பூா் மாவட்ட இளைஞரணியினா் திரளாக பங்கேற்றனா்.

முன்னதாக கூட்டத்தில் செய்தியாளா்கள், புகைப்படக்கலைஞா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.