ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூா் வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 1.18 லட்சம் சிக்கியது

கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Published On :18 ஜூலை 2026, 1:04 am IST

கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், கணக்கில் வராத பணம் ரூ.1.18 லட்சம் சிக்கியது.

கடந்த வாரம் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா்களும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்புதான் கரூா் வட்டாட்சியராக பிரகாஷ் பொறுப்பேற்றாா். இந்நிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரையடுத்து கரூா் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா்கள் சுவாமிநாதன், தங்கமணி ஆகியோா் தலைமையில் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட 6 போ் கொண்ட குழுவினா், வெள்ளிக்கிழமை மாலை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனா்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.18 லட்சம் சிக்கியது. இதை பறிமுதல் செய்த போலீஸாா், எப்படி இந்த பணம் அலுவலகத்துக்கு வந்தது, யாரேனும் லஞ்சமாக கொடுத்த பணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.