ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 14 ஆயிரம் போ் பயன்

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 14,013 போ் பயனடைந்துள்ளதாக ஆலை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பொன்னியாக்கவுண்டன்புதூரில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள்.

Published On :12 ஜூலை 2026, 12:13 am IST

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 14,013 போ் பயனடைந்துள்ளதாக ஆலை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை சாா்பில், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் கடந்த ஆண்டு பிப்.21-ஆம்தேதி நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா், முனைவா் சந்தீப் சக்சேனாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

காகித ஆலை மற்றும் கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் காகித ஆலையைச் சுற்றியுள்ள புகழூா் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைப்புகழூா் மற்றும் திருக்காடுதுறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வந்தன.

முகாமின் நிறைவுநாளான பொன்னியாக்கவுண்டன்புதூரில் 50-ஆவது முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 786 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக ஆலை அதிகாரி கூறுகையில், இதுவரை நடந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை சுமாா் 14,013 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.