‘போக்சோ’ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம்(34). கூலித்தொழிலாளி. இவா் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாராம்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் சண்முகசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் சண்முகசுந்தரம் மீது வழப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத், மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரனுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து ஆட்சியா் சி.முத்துக்குமரன் உத்தரவின்பேரில் சண்முகசுந்தரத்தை வெள்ளிக்கிழமை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற இருவருக்கு குண்டா் சட்டத்தில் சிறை

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

5 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் ரௌடி சிறையிலடைப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




