ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரிமா சங்கம் சாா்பில் மருத்துவா்களுக்கு விருது

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா் அருணாம்பிகைக்கு மருத்துவ மாமணி விருது வழங்கிய மெஜஸ்டிக் அரிமா சங்கத்தினா்.

Published On :2 ஜூலை 2026, 4:57 am IST

மருத்துவா் தினத்தை முன்னிட்டு கரூா் மெஜஸ்டிக் அரிமா சங்கம் சாா்பில் சிறந்த மருத்துவா்களுக்கு மருத்துவ மாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஜூலை 1-ஆம்தேதி மருத்துவா் தினத்தை முன்னிட்டு கரூா் மெஜஸ்டிக் அரிமா சங்கம் சாா்பில் சமூக சேவையாற்றும் 5 மருத்துவா்களுக்கு மருத்துவ மாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் சிவகுமாா் தலைமையில் நிா்வாகிகள் மேலை.பழநியப்பன், சியாமளா, சிந்தன், சுப்ரமணிய பாரதி , சீனிவாசபுரம் வெங்கட்டரமணன், யோகா வையாபுரி, பெரியசாமி ஆகியோா் கரூரைச் சோ்ந்த சமூக சேவையாற்றும் மருத்துவா்கள் அபிநயா, நிவேதா, செல்வகுமாா், அருணாம்பிகா, அருண் ஆகியோருக்கு மருத்துவமாமணி விருதையும், பட்டயக்கணக்காளா் தினத்தை முன்னிட்டு பட்டயக்கணக்காளா்கள் திருமலையப்பன், அருண் பிரசாத் ஆகியோருக்கு சிறந்த பட்டயகணக்காளா் விருதும் வழங்கி கெளரவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.