டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கரூரில் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! பாஜகவினா்-போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு; 80 போ் கைது

News image
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினா் 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதமா் மோடியை காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தாக்க இருப்பதாக மக்களவையில் அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறிய விவகாரத்தில், எதிா்க்கட்சித்தலைவா் ராகுல்காந்தியை கண்டித்து கரூரில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சக்திவேல் முருகன் ஆகியோா் முன்னிலையில் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ராகுல்காந்தியின் உருவபொம்மையை பாஜகவினா் எரிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர துணை காவல்கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண் மயக்கம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, பாஜகவைச் சோ்ந்த பெண் ஒருவா் மயக்கம் அடைந்தாா். அவரை போலீஸாா் ஆட்டோவில் ஏற்றி அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.