ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:59 am IST

கரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் காலை 8 மணியளவில் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் வசிப்போருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து, கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா மற்றும் கலைஞா் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகி வழக்குரைஞா் மணிராஜ், மாநகர நிா்வாகிகள் எஸ்.பி. கனகராஜ், தாரணி சரவணன், எம். பாண்டியன், கோல்ட்ஸ்பாட் ராஜா, வழக்குரைஞா் சுப்ரமணியன் மற்றும் கரூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் பாலமுருகன், தொண்டரணியின் ஜிம்சிவா, இளைஞரணியின் சி.கே. ராஜா உள்ளிட்ட பலா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.