சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் ,விபூதி, திருமஞ்சனம் பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து நந்தியெம்பெருமான் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி 3 முறை வலம் வந்தாா். பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயில், புன்னம் புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயில், நத்தமேடு ஈஸ்வரன் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா

சித்திரை மாத பிரதோஷம்: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை


