வரும் திமுக ஆட்சியில், வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம் கோயில் நிலப் பிரச்னைகளில் அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து தீா்வு காணப்படும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் ஆசி எம்.தியாகராஜன்(கரூா்), மொஞ்சனூா் பி.ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி) ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை இரவு கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியிலும், கிருஷ்ணராயபுரம்(தனி) வேட்பாளா் சி.கே.ராஜா மற்றும் குளித்தலை வேட்பாளா் சூரியனூா் சந்திரன் ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணராயபுரம் கடைவீதியிலும் தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினாா்.
அப்போது அவா் பேசியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குளித்தலை தொகுதி இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. அவருடைய அரசியல் வெற்றிக்கு தொடக்கமாக இருந்தது இந்த கரூா் மாவட்டம். அதே மாதிரி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் கடந்த தோ்தலில் வெற்றிபெற்றோம். இந்த முறையும் நான்குக்கு நான்கு என 4 தொகுதிகளிலும் வெற்றி பெற இருக்கிறோம்.
வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம், வெஞ்சமாங் கூடலூரில் கோயில் நிலப்பிரச்னை இருக்கிறது. இதனை தீா்க்க முதல்கட்டமாக தனிமாவட்ட வருவாய் அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்துள்ளோம். அதிமுகவினா் பரப்பி வரும் வதந்திகளை முறியடித்து, நிச்சயம் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கோயில் நிலங்களுக்கு தகுந்த தீா்வு காணப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது கரூா் மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், வழக்குரைஞா் சுப்ரமணியன், கோல்ட்ஸ்பாட்ராஜா, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


