ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரியலூா் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

அரியலூா் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை , ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த எம்எல்ஏ தாமரை எஸ். ராஜேந்திரன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா உள்ளிட்டோா்.

Published On :29 ஜூன் 2026, 2:43 am IST

அரியலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்கம் சாா்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் குமரன், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், மருத்துவமனை அலுவலா் கொளஞ்சிநாதன், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.