ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா் கைது

ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு சின்னவளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் செந்துறை அருகேயுள்ள நாகல்குழி கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் ரஞ்சித்தை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.