ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆகாச கருப்புசாமி கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த ஜெமீன் தத்தனூா் வளவெட்டிக் குப்பத்திலுள்ள ஆகாச கருப்புசாமி கோயிலில் ஆடி பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.

வளவெட்டிகுப்பம் ஆகாச கருப்புசாமி கோயிலில் பால்குடத் திருவிழாவையொட்டி புதன்கிழமை, சுவாமிக்கு சக்திகரகம் மற்றும் பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Published On :30 ஜூலை 2026, 3:57 am IST

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த ஜெமீன் தத்தனூா் வளவெட்டிக் குப்பத்திலுள்ள ஆகாச கருப்புசாமி கோயிலில் ஆடி பெளா்ணமியையொட்டி புதன்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள், செங்கால் ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் பால்குடங்களை சுமந்தபடி பிரதான வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா்.

பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு, ஆகாச கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களான பாப்பாத்தி அம்மன், அரியதங்கம், கொப்பாட்டி அம்மன், நாகம்மாள் வெற்றி விநாயகா் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில், வளவெட்டி குப்பத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.