ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரியலூரில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதியா் சங்கங்களை அழைத்துப் பேசாமல் காப்பீட்டு நிறுவனத்தை மட்டுமே அழைத்துப் பேசி வெளியிட்டுள்ள முரண்கள் நிறைந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி காப்பீட்டுத் திட்டத்தை காசில்லா மருத்துவக் காப்பீடு திட்டமாக அமல்படுத்திட வேண்டும். மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களில் ஓய்வூதியா் சங்கப் பிரதிநிதிகளை அவசியம் ஈடுபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டாரத் தலைவா் என்.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் தண்டபாணி, வெங்கட்ராமன், இணைச் செயலா் ராஜவேல், முன்னாள் செயற்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.