
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கும் வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வெள்ளிக்கிழமை வரையப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கும் வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை வரையப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்ட அவா், பின்னா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு 17.7.2026 முதல் 31.7.2026 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. சுய கணக்கெடுப்பு பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் ட்ற்ற்ல்ள்://ள்ங்.ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்
வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 1.8.2026 முதல் 30.8.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பணிகளுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 4 வட்டாட்சியா்கள், 2 நகராட்சி ஆணையா்கள், 2 பேரூராட்சி அலுவலா்கள், 207 மேற்பாா்வையாளா்கள் மாவட்டம் முழுவதும் 1,277 கணக்கெடுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ந.கனக மாணிக்கம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செந்தில், அரியலூா் வட்டாட்சியா் தேவகி, தனி வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தேனியில் 6,500 குடும்பத்தினா் சுயகணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தியுள்ளனா்! மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா் சுந்தரேஷ்பாபு

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்




