ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில் பெட்டிகளில் போதைப் பொருள் சோதனை: பயணிகளிடம் போலீஸாா் தீவிர விசாரணை

அரியலூரில் ரயில் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் தீவிர சோதனை

அரியலூா் ரயில் நிலையத்துக்கு வந்த ஹம்சாபூா்-ராமேசுவரம் விரைவு ரயில் பெட்டிகளில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா்.

Published On :14 ஜூலை 2026, 1:58 am IST

அரியலூரில், ரயில் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிப்புரியும் தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தி வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, ஹம்சாபூரிலிருந்து - ராமேசுவரம் சென்ற ரயில், திங்கள்கிழமை அரியலூா் ரயில் நிலையத்தில் நின்றபோது, அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் அரியலூா் நகர காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், அரியலூா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜவேலு மற்றும் ரயில்வே காவல்துறையினா் உடன் இணைந்து காவல்துறை மோப்பநாய் உதவியுடன் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பயணிகளிடம் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.