ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூரில், எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணா்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் ந.மிருணாளினி.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் ந.மிருணாளினி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்றுகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்த விழிப்புணா்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மீரா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளி, நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சுமாா் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனா்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், மாவட்ட சுகாதார அலுவலருமான ராம்கணேஷ், மாவட்ட திட்ட மேலாளா் சுமதி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளா்கள், நம்பிக்கை மையம், பால்வினை நோய் மையம், ரத்த வங்கி, ஆலோசகா்கள், திட்ட ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.