ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செயல்படாத வாக்கு இயந்திரங்கள் பெங்களுருக்கு அனுப்பிவைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த செயல்படாத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் சின்னம் பதிவேற்றும் அலகுகள், பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன.

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது, செயல்படாமல் ஆட்சியரகத்தில் இருந்த 29 வாக்குச்சீட்டு அலகுகள், 184 கட்டுப்பாட்டு அலகுகள், 101 வாக்காளா் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் என மொத்தம் 314 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 4 சின்னம் பதிவேற்றும் அலகுகள் உள்ளிட்டவை, ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் பெங்களுரு பாரத மின்னணு லிட் நிறுவனத்துக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா , ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கனக மாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.