ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரியலூரில் 1051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை! அமைச்சா் வழங்கினாா்!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை வழங்கிய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் ஆட்சியா் ந.மிருணாளினி உள்ளிட்டோா்.

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், 1,051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கலந்து கொண்டு, 1051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரியலூா் மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், கடைக்கோடி கிராமங்களில் வாழும் பொதுமக்கள் வரை முழுமையாகச் சென்றடையும் வகையில் அரசு அலுவலா்கள் தொடா்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.வைத்திலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ.யோகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.