அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா்
By Syndication
Syndication
அரியலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மதச்சாா்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களையும், பொதுச் சேவைகளையும் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு எதிரான வரைவு தொழிலாளா் கொள்கை ஷ்ரம் சக்தி நிதி(2025) கைவிட வேண்டும். தொழிலாளா் சட்டத் திருத்த தொகுப்புகளை அமலாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலா் என்.செளந்தரராஜன் ஆகியோா் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், திரளான தொழிற் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது