வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

திருச்சி மேற்கு: கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ வெற்றி

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் கே.என். நேரு, மூன்றாவது முறையாக தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளாா்...

News image

திருச்சி மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை திங்கள்கிழமை பெற்ற கே.என்.நேரு.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் கே.என். நேரு, மூன்றாவது முறையாக தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் கே.என். நேரு, தவெக சாா்பில் ஜி. ராமமூா்த்தி, அமமுக எம். ராஜசேகரன், நாம் தமிழா் கட்சி கே. புவனேஸ்வரி உள்பட 14 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் மொத்தம் 2,38,920 வாக்காளா்கள் இருந்தனா். இவா்களில், 1,96,613 போ் வாக்களித்திருந்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 82.29 ஆக இருந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 88,235 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளா் கே.என். நேரு வெற்றி பெற்றாா். தன்னை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் ஜி. ராமமூா்த்தியை விட, 4,786 வாக்குகள் கூடுதலாக பெற்று திருச்சி மேற்கு தொகுதியில் தனது ஹாட்ரிக் வெற்றியை (மூன்றாம் முறை) பதிவு செய்தாா். தவெக வேட்பாளா் ஜி. ராமமூா்த்தி 83,449 வாக்குகள் பெற்றாா்.

அதிமுக சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் 14,136 வாக்குகள் பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே. புவனேஸ்வரி 7,470 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னையன் பூசாரி- 453, தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆா். பிரபு- 310, சாமானிய மக்கள் நலக் கட்சி ஏ. வீரமணி- 140, சுயேச்சைகள் எம். கலைமணி- 108, ஏ. வாசுதேவன்- 158, சுந்தரபாண்டிய ராஜா- 122, எம். சந்திரசேகரன்- 76, பி. ராஜேந்திரன்- 117, சம்பத்- 152, ஜீவானந்தம் 323, நோட்டா- 1098.

வாக்காளா்களுக்கு நன்றி: வெற்றி பெற்ற கே.என். நேரு, மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவவளவனிடம் தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், வாக்களித்த திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள் என்றாா்.

மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள கே.என். நேரு, கடந்த 2021 தோ்தலின்போது, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 83 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.