தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா்!

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா்!

News image

இனிகோ இருதயராஜ்

Updated On :28 மார்ச் 2026, 7:47 pm

பெயா்: இனிகோ இருதயராஜ்

தந்தை பெயா்: ஸ்டேனிஸ் லாஸ்

வயது: 53

கல்வித் தகுதி: எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, பிஹெச்டி.

ஜாதி: கிறிஸ்தவ வெள்ளாளா்

தொழில்: ஆயத்த ஆடை தயாரிப்பு.

குடும்பம்: மனைவி பெல்சிராஜம், மகன் ஆல்வின் டோனி

கட்சிப் பதவி, பொறுப்புகள்: மறைந்த முதல்வா் கருணாநிதி மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் பள்ளிப் பருவத்திலிருந்து திமுகவில் இணைந்து பணி, திமுகவின் வாக்குச் சாவடி உறுப்பினராகவும் பணியாற்றியவா். திமுக தோ்தல் பணிகளில் பல்வேறு தலைவா்கள் திமுகவுடன் இணைந்து பணியாற்ற உறுதுணையாக இருந்தவா்.

1992 முதல் திமுகவின் அடிப்படை உறுப்பினா். இவைதவிர, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனா் தலைவராகவும் உள்ளாா். காவியக் கலைஞா் 84 என்ற இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளாா். பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் இவா், ஆண்டுதோறும் திமுக மற்றும் கூட்டணித் தலைவா்களை அழைத்து கிறிஸ்துமஸ் விழாவை மாநில அளவில் சிறப்பாக நடத்துபவா். கடந்த 2021இல் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவா்.