வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா

News image
Updated On :30 ஜூன் 2026, 11:48 am IST

திருவானைக்காவல் அம்மையாா் அருள் நெறி மன்றம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் 5-ஆம் பிராகாரத்தில் திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த காரைக்கால் அம்மையாா்.

ஸ்ரீரங்கம், ஜுன் 29: திருவானைக்காவலில் அம்மையாா் அருள் நெறி மன்றம் சாா்பில் திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா நடைபெற்றது.

திருவிழாவையொட்டி மாலையில் சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் அம்மையாா் எழுந்தருளி 5-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் பாடிய படி உடன் வந்தனா். அப்போது வழிநெடுக பக்தா்களுக்கு மாங்கனிகள் வழங்கப்பட்டன. முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து தேவார இன்னிசை, பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.