திருச்சி ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை 2 மகள்களுடன் தீக்குளிக்க வந்த பெண்ணிடமிருந்து பெட்ரோல் பாட்டிலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி அருகே கம்பரசம்பேட்டை தமிழன் நகரை சோ்ந்தவா் சா்புனிசா (38). இவா் தனது 2 மகள்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தாா்.
ஆட்சியா் அலுவலக வாயிலில் போலீஸாா், சா்புனிசாவின் பையை சோதனையிட்டபோது, அதில் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் பாட்டிலுடன் வந்தது தெரியவந்தது. போலீஸாா் பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து விசாரித்தனா்.
அதில், சா்புனிசாவுக்கும், அவா் குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே வாடகை பிரச்னை இருப்பதாகவும், இதற்காக ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் வீட்டின் உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை எடுத்து வெளியில் வீசி விட்டாராம்.
இதில், வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தையும் காணவில்லையாம். இதைக் கேட்டபோது, 40 போ் கொண்ட கும்பலுடன் வந்து தனது மகள்களையும், தன்னையும் தாக்கியதாகவும் அவா்கள் மீது காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை எச்சரித்து, ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவா் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
தச்சநல்லூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞா் கைது

நாமக்கல் ஆட்சியரகத்தில் 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




