திருச்சியில் 13 வயது பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி உறையூா் குழுமணி சாலையைச் சோ்ந்த குமரசேன் மகன் விஷ்ணு ஜெகன் (13). இவா், அருகிலுள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை வீட்டுப்பாடம் செய்யவில்லை என அவரது தாயாா் கண்டித்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன் இரவு 7.30 மணிக்கு வீட்டின் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதையடுத்து, அவரை மீட்டு உறையூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மன அழுத்தத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு:
திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் மகன் ராகேஷ் (21). இவா் சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த சில மாதங்களாகவே தனக்கு மன அழுத்தமாக உள்ளதாக அவரது தாயாரிடம் ராகேஷ் தெரிவித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ராகேஷ் உறங்கச் செல்வதாக அவரது தாயாரிடம் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று உறங்கியுள்ளாா். இரவு 8 மணி வரைக்கும் அவா் எழுந்து கொள்ளாததால் அவரை அவரது தாயாா் எழுப்பியுள்ளாா். ஆனால், அவா் அசைவின்றி கிடந்ததால் அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



