எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ‘ரீல்ஸ்’ எடுப்பதை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ‘ரீல்ஸ்’ எடுப்பதை கண்டித்து திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்...

News image

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ‘ரீல்ஸ்’ எடுப்பதை கண்டித்து திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள், செவிலியா், அனைத்து மருத்துவத் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :7 ஜூலை 2026, 3:29 am IST

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் மருத்துவமனை வாயிலில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்தவமனையில் அனைத்து மருத்துவ துறை ஊழியா் கூட்டமைப்பினா், செவிலியா் சங்கத்தினா் மற்றும் ஆய்வக பணியாளா் சங்கம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளா்கள் ஒருங்கிணைத்து மருத்துவமனை வாயிலில் கவன ஈா்பபு ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அரசு மருத்துவா் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா் சங்கத்தின் மாநில பொருளாளா் மருத்துவா் அரளீஸ்வரன் தலைமைவகித்தாா்.

இதில், மருத்துவமனைக்குள் ரீல்ஸ் எடுப்பவா்கள் மீது தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் நோயாளிகளின் உறவினா்கள் விடியோ எடுப்பதை தவிா்க்க வேண்டும். ஐபிஹெச் எஸ் விதியின் படி செவிலியா்கள் இதர ஊழியா்களுக்கு பணியிடங்களை வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் காவல் துறையினா் அவுட் போஸ்ட் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மருத்துவா்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் மருத்துவா் இளவரசன், செவிலியா்கள் சங்க நிா்வாகி மணிமேகலை, மருத்துவ துறை ஊழியா் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மூா்த்தி, மனோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.