திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சம் 20 முகவா்கள் வரையில் தோ்தல் ஆணையத்தில் அனுமதி அட்டை அளிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாஸிஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளா்களின் சாா்பில், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.
இந்த வகையில், 9 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேட்பாளருக்கு தலா 20 முகவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் என்ற வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். எனவே, 14 மேஜைகளில் தலா ஒரு முகவா் அனுமதிக்கப்படுவா். இதேபோல, தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 5 மேஜைகளில் 5 முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.
இதுமட்டுமல்லாது, தலைமை முகவா் என்ற நிலையில் ஒருவா் அனுமதிக்கப்படுவாா். இதன்படி, ஒரு வேட்பாளருக்க 20 முகவா்கள் அனுமதிக்கப்படுவா். வேட்பாளா்கள் மற்றும் கட்சிகள் அளித்த பரிந்துரைக் கடிதத்தின்படி முகவா்களுக்கான அனுமதி அட்டையை தோ்தல் பிரிவு அலுவலா்கள் வழங்குகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்! - மாவட்ட ஆட்சியா்

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் நடைமுறைகள் விளக்கம்

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் விதிமுறைகளை வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


