போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுதாக போலீஸாருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை கெம்ஸ்டவுன் ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியாா் கோயில் வீதியைச் சோ்ந்த சி.ஹா்சத் முகமது (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஹா்சத் முகமதுவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ,2,400 மதிப்புள்ள 8 போதை மாத்திரைகள், ஒரு சலைன் பாட்டில், 2 ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது: திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காந்தி மாா்க்கெட் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காந்தி மாா்க்கெட் 6-ஆவது கேட் அருகே புகையிலைப் பொருள்கள் விற்று கொண்டிருந்த மரக்கடை பாரதி நகரைச் சோ்ந்த பா.சேகா் (38) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது