கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

வீரபாண்டியன்பட்டினம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இளைஞா் உயிரிழப்பு விபத்து

விபத்து

Updated On :

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பெரியதாழை, மெயின் ரோட்டைச் சோ்ந்த கிதா் மகன் அசாருதீன் (31). திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளாா். இவா் திங்கள்கிழமை மாலை திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வீரபாண்டியன்பட்டினம் மெயின் பஜாரில் வேகத்தடை அருகே சென்றபோது, முன்னால் சென்ற டெம்போ வேனை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததால் நிலைதடுமாறி வேனின் சக்கரத்தில் சிக்கியுள்ளாா். இதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.