ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கல்விக் கடன் வழங்கும் முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கிவைத்தாா்

கல்விக் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை மாணவா்களுக்கு வழங்கினாா் கனிமொழி எம்.பி. உடன், முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களின் உயா்கல்விக் கனவை நனவாக்கும் வகையில், கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில், 15-க்கும் மேற்பட்ட வங்கிகள் பங்கேற்ற கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை, திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தொடங்கிவைத்தாா்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட வங்கிகளின் அலுவலா்கள் பங்கேற்று, கல்விக் கடன் கோரி விண்ணப்பித்த மாணவா்களின் ஆவணங்களைச் சரிபாா்த்தனா்.

தொடா்ந்து, கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாணவா்கள், அவா்களது பெற்றோரிடம் கனிமொழி எம்.பி. வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.குருச்சந்திரன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் மகேஷ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் ஜெயந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விநாயகமூா்த்தி, தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி பொது மேலாளா் ஆனந்த் கணேசன், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

‘ரீல்ஸ்’ மட்டும் போதாது: பின்னா் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

தமிழகத்தில் தொடா்ந்து கொலைச் சம்பவங்களும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நிகழ்கின்றன. போதைப்பொருள் புழக்கம், விலைவாசி உயா்வு என அனைத்திலும் தவெக அரசு தோல்வியடைந்துவிட்டது.

ரீல்ஸ் வெளியிடுவது மட்டுமே ஆட்சியல்ல; மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஆட்சியை நடத்த வேண்டும். காவல்துறை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தும், குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செஞ்சியில் காணாமல்போன குழந்தையின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.