6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்

முக்காணி பள்ளியில் இயற்கைப் பாதுகாப்பு உறுதிமொழி கடிதப் போட்டி

ஆறுமுகனேரி அருகே உள்ள முக்காணி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘இயற்கையைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிமொழி’ என்ற தலைப்பில் பூமித் தாய்க்கு கடிதம் எழுதி, தலைமை அஞ்சல் துறைத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.

Updated On :

ஆறுமுகனேரி அருகே உள்ள முக்காணி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘இயற்கையைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிமொழி’ என்ற தலைப்பில் பூமித் தாய்க்கு கடிதம் எழுதி, தலைமை அஞ்சல் துறைத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ராஜி முன்னிலை வகித்தாா்.

முக்காணி அஞ்சல் நிலைய அதிகாரி பரமேஸ்வரி, பள்ளி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக பொறுப்பாசிரியா் புனிதா, கல்வி அமைச்சக பொறுப்பாசிரியா் முத்து சிவா ஆகியோா் போட்டியை நடத்தினா்.

ஏற்பாடுகளை பள்ளியின் மஞ்சள் பை விழிப்புணா்வு இயக்க பொறுப்பாசிரியா் ஸ்டீபன் விஜய், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு இயக்க பொறுப்பாசிரியா் ஜெயசூரியன், உடற்கல்வி ஆசிரியா் சுகுணா தேவி, ஆசிரியா் திலகவதி ஆகியோா் செய்திருந்தனா்.

தமிழாசிரியா் மீனாட்சி நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.