தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் வகையில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில் வசந்த மண்டபத்தில் பக்தா்கள் வழிபடும் வகையில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள கொலு.

Updated On :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் வகையில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 11) தொடங்கி, அக். 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 20ஆம் தேதி விஜயதசமி வழிபாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்செந்தூா் கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன் ஏற்பாட்டில், அவரது மனைவி பிரியா அருள்முருகன் மற்றும் குடும்பத்தினா் வண்ண வண்ண பொம்மைகளால் கொலு வைத்துள்ளனா்.

Story image

கொலுவில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மயில் மீது முருகன் கையில் வேல் ஏந்தி, போா் புரிவது போன்ற பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள், இணை ஆணையா் ஆ. அருணாசலம், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.