இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதல்: தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

பலி

Updated On :

கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-ஆவது தெருவை சோ்ந்த குருசாமி மகன் மூா்த்தி (51). நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். புது ரோடு-எட்டயபுரம் சந்திப்பு பகுதியில் சென்றபோது டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் விளாத்திகுளம் கீழக்கரந்தையைச் சோ்ந்த கண்ணனிடம் (22) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.