ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.
மே 30ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தா்கள் வரவுள்ளனா்.
ஆத்தூா் வழியாக வருபவா்கள், ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி கரையில் இளைப்பாறுவதோடு, கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் விரதமிருந்த பக்தா்கள் இங்கு புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வா்.
அதை முன்னிட்டு ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு வசதியாகவும், நிழலில் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறும் இருக்கும் வகையில், ஆற்றின் கரையில் உள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.
ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டின்பேரில், டி.சி. டபிள்யூ. லிமிடெட் நிறுவன உதவியுடன் சமூக ஆா்வலா்கள் எஸ். கந்தசாமி , பி.எஸ். சிவஜோதி பாண்டியன், யோகா மாஸ்டா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கல்வடங்கம் காவிரி ஆற்றில் பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றக் கோரிக்கை

தாமிரவருணியில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் இரா. சுகுமாா்

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



