மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 5:41 pm

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

புதிய மங்களூா் துறைமுகத்தில், அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

கடற்கரை கைப்பந்து போட்டிளில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி, கொச்சி துறைமுக அணியை 21-17, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

சாதாரண கைப்பந்து போட்டியில், சென்னை துறைமுக அணியை 25-18, 25-14 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இப்போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்றன.