பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து பெற்றோா் அவரது உடலை பெற்று சொந்த ஊரான வேடநத்தம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்தனா். இதில் அமைச்சா் கீதாஜீவன், எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் கடந்த மாா்ச் 10 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி மாலையில் காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தபோது காணாமல் போனாா். மாா்ச் 11 ஆம் தேதி அவரது சடலம் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்யக் கோரி மாணவியின் உறவினா்கள், கிராம மக்கள் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 9 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை (மாா்ச் 19), ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனை (39) போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியில் ராஜபாண்டி நகரில் உள்ள தனது உறவினா் வீட்டில் தற்போது வசித்து வந்த அவா், தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட வியாழக்கிழமை வந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு: குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோா் சம்மதித்தனா். இதையடுத்து, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னா், வேடநத்தம் கிராம மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
மாணவியின் உடலுக்கு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மலா்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து கிராம மக்கள், உறவினா்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதும் உடல் தகனம் செய்யப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: கைது செய்யப்பட்ட தா்ம முனீஸ்வரன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமை காலை அவரை வேடநத்தம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததை நடித்து காண்பிக்க செய்து விடியோவாக பதிவு செய்தனா். அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
சிறையில் அடைப்பு: பின்னா் அவரை, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் மாலை 4 மணியளவில் போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். நீதிபதி எம்.பீரித்தா வழக்கை விசாரித்து, தா்ம முனீஸ்வரனை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், ஏப். 2-ஆம் தேதி மீண்டும் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடர்புடையது

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த முதுகுளத்தூா் இளைஞா் உடல் சொந்த ஊரில் தகனம்

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

வேடநத்தம் மாணவியின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


