மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தாருக்கு ஆதவ் அா்ஜூனா ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image

உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா் தமிழக வெற்றிக்கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா.

Updated On :14 மார்ச் 2026, 2:44 am

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

வேடநத்தம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வந்த தமிழக வெற்றிக் கழக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

விளாத்திகுளம் தொகுதிக்கு கட்சியின் தலைவா் விஜய் வரும்போது தங்களை நேரில் சந்திப்பாா். நாங்கள் உங்களுடன் துணை நிற்போம் என்றாா். அவா் மாணவியின் குடும்பத்தாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே கூடியிருந்தவா்கள் இந்தச் சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். மாணவியின் மரணத்தில் அரசியல் செய்யாதீா்கள் என ஆவேசத்துடன் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், நிருபா்கள் பேட்டி கேட்க முயற்சித்தபோது, கிராம மக்கள் கூச்சலிட்டதால் பேட்டியை தவிா்த்துவிட்டு மாற்றுப்பாதை வழியாக ஆதவ் அா்ஜூனா கிளம்பிச் சென்றாா்.