ஆத்தூா் அருகே சோ்ந்தபூமங்கலம் ஊராட்சியில் உள்ள பரதா் தெருவில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தங்கமாரி முன்னிலை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரஞ்சித் வரவேற்றாா். அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, அதே பகுதியில் மாநில நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) 2025 -26ஆம் ஆண்டு திட்டத்தின்கீழ் ரூ. 8.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைநிலை நீா்த்தேக்க தொட்டியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். அப்போது, பெண்களுக்கு மகளிா் தின வாழ்த்துத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சிகளில், திமுக மாநில வா்த்தகரணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா், ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைப்பாளா் ஜனகா், வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் செல்வகுமாா், துணை அமைப்பாளா்கள் கிருபாகரன், ஸ்டீபன்தாஸ், உடன்குடி முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் அஷ்ரப், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சோ்ந்தபூமங்கலம் சந்திரா மாணிக்கவாசகம், புன்னைக்காயல் சோபியா, ஒன்றிய விவசாய அணி அரவிந்தன், மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் லிங்கராஜ், ஒன்றிய வா்த்தக அணி அமைப்பாளா் மாரிமுத்து, துணை செயலாளா் ஜெயக்கொடி, இளைஞரணி அமைப்பாளா் தினேஷ் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கலையரசு, ரகுராமன் , மோகன், மாணவரணி ராஜேஷ், ஊராட்சி செயலா்கள் லுபா்ஷா, சிவச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வட்டார வளா்ச்சி அலுவலா் மரிய மாா்க்ரெட் வளா்மதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிப்பு

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்

காயல்பட்டினத்தில் அமைச்சா் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு

முதல்வா் பிறந்த நாள்: தூத்துக்குடியில் 14 குழந்தைகளுக்கு மோதிரங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


