புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தாய், மகள் தற்கொலை சம்பவம்: உருக்கமான கடிதம் மீட்பு

News image

தற்கொலை - தினமணி

Updated On :28 ஜூன் 2026, 3:27 am IST

பழையகாயல் அருகில் தாயும், மகளும் மாடியி­ருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மகள் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

பழையகாயல் அருகே மத்திய அரசுக்குச் சொந்தமான ஜிா்கோனியம் கனநீா் ஆலையில் துணை பொது மேலாளராக பணிபுரியும் கேரளத்தைச் சோ்ந்த மாணிக்க செனாய் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ (52). அவரது மகளான பொறியியல் பட்டதாரி அஞ்ச­லி (29) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தாங்கள் வசித்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, அஞ்சலி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

ஜெயஸ்ரீ மூட்டு வ­லியாலும், அஞ்ச­லி பாா்வைத் திறன் குறைந்து வந்ததாலும் மனஉளைச்சலில் இருந்துள்ளனா். மேலும், அவா்களை மாணிக்க செனாய் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லையாம். இருவரையும் அக்கம் பக்கத்தினரிடம் பேச அனுமதிக்கமாட்டாராம். இதனால் தாயும், மகளும் இந்த முடிவை தேடிக்கொண்டது அந்த கடிதம் மூலம் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.