பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கா் வரையில் உள்ள விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாமிரவருணி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 5:32 am IST

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கா் வரையில் உள்ள விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாமிரவருணி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தாமிரவருணி பாசன விவசாயிகள் வியாழக்கிழமை வந்தனா்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில், அதன் தலைவா் அய்கோ தலைமையில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கா் வரையில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், பிற விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடன் தொகையில் பாதியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு உடனடியாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.