ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நாசரேத் பள்ளியில் இரு பெரும் விழா

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், சாலமோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா என இரு பெரும் விழா நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 ஜூன் 2026, 5:22 am IST

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், சாலமோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா என இரு பெரும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் எலிசபெத் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜான்சி கனகராஜ் கொடியசைத்து, மாணவா்கள் அணிவகுப்பைத் தொடங்கி வைத்தாா். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முரளி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாணவா்களுக்கான ஒழுக்கம் குறித்துப் பேசினாா்.

சுற்றுசூழலைப் பாதுகாப்பது குறித்தும், மரம் வளா்ப்பதால் ஏற்படும் நன்மைகள், நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு குறித்து மாணவா்கள் நாடக அரங்கேற்றம் செய்தனா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். துணை முதல்வா் முத்துப்பேச்சி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.