ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டுவர நடவடிக்கை

நிஷாந்த்.

Published On :22 ஜூன் 2026, 2:55 am IST

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடலை ஓரிரு நாள்களுக்குள் தூத்துக்குடி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் ஸ்ரீநாத்.

தூத்துக்குடியைச் சோ்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், கடந்த 11ஆம் தேதி ஓமன் நாட்டில் கப்பலில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஓமன் தலைநகா் மஸ்கட்டில் தற்போது உள்ளது.

இந்நிலையில் நிஷாந்தின் மனைவி, குடும்பத்தினரை தமிழக மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத், சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசின் மீன்வளத்துறை சாா்பில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, நிஷாந்தின் உடலை ஓரிரு நாள்களுக்குள் தூத்துக்குடி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிஷாந்த் மனைவியின் கல்வித் தகுதியை கணக்கில் கொண்டு தமிழக அரசு சாா்பில் அரசு வேலை வழங்கவும், அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

வேலைக்கு உத்தரவு:

இதற்கிடையே, கப்பல் மாலுமி நிஷாந்தின் மனைவி சராபின் அளித்த கோரிக்கை மனுவை அமைச்சா் ஸ்ரீநாத், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், சராபினுக்கு தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தூத்துக்குடி மேலாளா் அலுவலகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளா் பணி வழங்கி, மேலாண்மை இயக்குநா் க. விஜய காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.