ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேக்கேதாட்டு: அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா்

மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்களில் அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவைப் பேணும் வகையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளா்களிடம் பேசிய கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்களில் அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவைப் பேணும் வகையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் கா்நாடகம் செல்ல முயற்சித்திருப்பது நல்லெண்ண அடிப்படையிலானதாக இருக்கலாம். இது குறித்து, அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்திலும் இது போன்ற பேச்சுவாா்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் முயற்சிக்கு எதிராக முஸ்லிம் லீக் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தவெக அரசு லஞ்சம், ஊழலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள் புதுப்பிப்பு, பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றில் முன்புபோல் லஞ்சம் இல்லை என நாங்கள் கருதுகிறோம்.

விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினா் நலத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாா்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும்.

பூரண மதுவிலக்கே முஸ்லிம் லீக்கின் கொள்கை. சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பாஜக அரசுதான் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.