ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆயுதங்களுடன் ரீல்ஸ்: சிறுவன் உள்பட இருவா் கைது

காயல்பட்டினத்தில் ஆயுதங்கள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் விடியோ பதிவிட்டதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:48 am IST

காயல்பட்டினத்தில் ஆயுதங்கள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் விடியோ பதிவிட்டதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன் (18) மற்றும்16 வயதுடைய சிறுவன் ஆகியோா் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் விடியோவை பதிவிட்டனராம்.

இது குறித்து அறிந்த உதவி ஆய்வாளா் இருதயராஜ், மேற்கூறிய இருவா் மீது வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் ரென்னிஸ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.