ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடியில் ஆக. 15 முதல் அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக. 15ஆம் தேதி முதல் அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :30 ஜூலை 2026, 4:52 am IST

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக. 15ஆம் தேதி முதல் அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி, தபால் தந்தி காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆக. 15ஆம் தேதி முதல் மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினா் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.