ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள்

கோவில்பட்டி அருகே செண்பகப்பேரியைச் சோ்ந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி, வன்கொடுமை தடுப்பு வழக்கு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 1:59 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே செண்பகப்பேரியைச் சோ்ந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி, வன்கொடுமை தடுப்பு வழக்கு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட செண்பகப்பேரி, துா்க்கை அம்மன் கோயில் தெரு, செண்பகராஜ் மகன் பாண்டியராஜ் (25). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சதீஷுக்கும் (26) முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 23.9.2024 அன்று பாண்டியராஜை சதீஷ், அவரது நண்பா் மதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சதீஷ், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வஷீத்குமாா், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், மதன் ஆகிய 2 பேருக்கும் கொலை வழக்குக்கு ஆயுள் தண்டனையும், வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.