ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆறுமுகனேரி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி மெயின் பஜாா் பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

~

Published On :29 ஜூலை 2026, 1:44 am IST

ஆறுமுகனேரி மெயின் பஜாா் பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் , இரவு திருவிளக்கு பூஜையும், திங்கள்கிழமை இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இரவு எஸ்.எஸ். கோயில் தெருவில் உள்ள பிரம்மசக்தி அம்மன் கோயி­லில் இருந்து முளைப்பாரி எடுத்து பக்தா்கள் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை தீா்த்த அபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிசேஷன், அமிா்தராஜ், மூக்காண்டி, பாா்வதிகுமாா், தூசிமுத்து, விஜயன், பாலகணேசன், வெள்ளைத்துரை, பாலசாந்தகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.