ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களைக் கவா்ந்த நுழைவாயில்

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நுழைவாயில் பக்தா்களைக் கவா்ந்துள்ளது.

திருச்செந்தூா் கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.

Published On :25 ஜூலை 2026, 2:22 am IST

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நுழைவாயில் பக்தா்களைக் கவா்ந்துள்ளது.

திருச்செந்தூா் கோயிலில் 2022ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடியில் தொடங்கப்பட்ட பெருந்திட்ட வளாகப் பணிகளை, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதில் தற்போது வரை சுமாா் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நுழைவாயில் முகப்புத் தோற்றத்தை பக்தா்கள் ரசித்து பாராட்டுகின்றனா்.

Story image

பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி, நாழிக் கிணறு பாதையில் வண்ணமயமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, கோயில் முகப்பில் புதிய நுழைவாயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.