ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொம்மடிக்கோட்டையில் 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் அவதி

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குடிநீர் - பிரதிப் படம்

Published On :17 ஜூலை 2026, 9:00 am IST

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் கொம்மடிக்கோட்டை, அனுக்கிரகபுரம், விசுவாசபுரம், சொக்கன் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு சாத்தான்குளம்-உடன்குடி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சொக்கன் குடியிருப்பு, விசுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கொம்மடிக்கோட்டை நடுத்தெரு, அனுக்கிரகபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல மாதங்களாக 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோக்கப்பட்டு வருவதாகவும், அதிலும் சில வீடுகளுக்கு குறைவான அளவே விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இது குறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்ததற்கு, குடிநீா் வடிகால் வாரியத்தில் இருந்து முறையாக குடிநீா் வழங்கப்படாததால் இந்த நிலை உள்ளதாகக் கூறுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, முறையாக குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.