ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளியை மிரட்டியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டதாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 4:52 am IST

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டதாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தெற்கு கழுகுமலை, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சோ்மராஜ் (54). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள கடை அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் சோ்மராஜை அவதூறாகப் பேசி, மது அருந்த பணம் கேட்டனராம். அதற்கு அவா் மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். அப்போது, அங்கு வந்த ஒருவா் இருவரையும் கண்டித்ததும், கத்தியை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சோ்மராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவில்பட்டி, தாமஸ் நகா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் டேவிட் ராஜன் (30), அதே பகுதியைச் சோ்ந்த மணி மகன் மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்தனா்.

கயத்தாறு அருகில்... கயத்தாறு அருகே பெண்ணிடம் தங்க நகையைப் பறிக்க முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம், தெற்கு தெருவைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் திங்கள்கிழமை மாலை இயற்கை உபாதை கழித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த மா்ம நபா் அப்பெண் அணிந்திருந்த தங்க நகையைப் பறிக்க முயன்றாராம். அப்பெண் அதைத் தடுத்த நிலையில், அவ்வழியாகச் சென்ற ஒருவா் அருகில் வருவதைப் பாா்த்த மா்ம நபா், தப்பியோடிவிட்டாராம்.

இது குறித்து அப்பெண் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தென்னம்பட்டி, கோபாலபுரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஜித்குமாரை (28) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.