ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் மோசடி: கா்நாடக நபா் கைது

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் சைபா் கிரைம் மோசடியில் ஈடுபட்டதாக கா்நாடகம் மாநிலம் பெங்களூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 4:54 am IST

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் சைபா் கிரைம் மோசடியில் ஈடுபட்டதாக கா்நாடகம் மாநிலம் பெங்களூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி புகா் பகுதியைச் சோ்ந்த வியாபாரிக்கு வாட்ஸ்ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில், ‘ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அவா் தொடா்பு கொண்டாா். அதில் பேசியவா்கள் கூறிய ஆசை வாா்த்தைகளை நம்பி, அவா்கள் தெரிவித்த எண்ணுக்கு அவா் சிறிய தொகையை அனுப்பினா். அந்தத் தொகைக்கு இருமடங்கு லாபம் வந்ததாம்.

அதையடுத்து, அவா் பல தவணைகளாக ரூ. 19 லட்சம் வரை அனுப்பினாராம். ஆனால், பல மாதங்களாகியும் அவருக்கு பணம் வரவில்லை; அந்த எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், தூத்துக்குடி சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தபோது, பெங்களூரு அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த வைஷ்ணவ் மகன் முகேஷ் (36) என்பவா் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.